புத்துமாரியம்மன் கோவிலில் இன்று கூழ் வார்த்தல்
ADDED :4158 days ago
திண்டிவனம்: திண்டிவனம் ஏரிக்கரையில் உள்ள புத்து மாரியம்மன் கோவிலில் 16 ம் ஆண்டு கூழ் வார்த்தல் விழா இன்று நடக்கிறது. காலை அம்மனுக்கு மகா அபிஷேகம், 10 மணிக்கு பூங்கரகத்துடன் கூழ் பானைகளை சுமந்து ஊர்வலமாக வந்து கோவிலில் கூழ் படைக்கின்றனர். இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஏரிக்கோடி தெரு, தீர்த்தகுளம் மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.