சபரிமலையில் பக்தருக்கு சேவை!
ADDED :4205 days ago
குமாரபாளையம்: நாமக்கல் மாவட்ட ஐயப்ப சேவா சங்கம், குமாரபாளையம் அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் நாராயண நகர் கிளை சார்பில், ஆண்டு தோறும், சபரிமலை ஐயப்பன் கோவிலில், அன்னதானம் வழங்கப்படுகிறது. கடந்த, 14 முதல், 19ம் தேதி, வைகாசி மாத நடைதிறப்பின் போது, ஸ்வாமியை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு, பல்வேறு வகையான அன்னதானம் வழங்கப்பட்டது. குமாரபாளையம் பகுதியில் இருந்து பங்கேற்ற, 200க்கும் மேற்பட்டோர், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு உதவி செய்தல், உடல் நலம் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ வசதி, மூலிகை குடிநீர் வழங்கல் உள்ளிட்ட பணிகளை செய்தனர். மாவட்ட தலைவர் ஜெகதீஸ், செயலாளர் பாலசுப்ரமணியன், மூத்த ஐயப்ப ஸ்வாமி குருமார்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.