உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்!

புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்!

உளுந்தூர்பேட்டை: எறையூர் புனித ஜெபமாலை அன்னை ஆலய தேரோட் டத்தின் துவக்கமாக கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா எறையூர் புனித ஜெபமாலை அன்னை ஆலய தேரோட்டம் வரும் 30ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு புனித ஜெபமாலை அன்னை தேரில் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. ஆலய பங்கு தந்தை ரொசாரியோ தலைமையில் பள்ளி முதல்வர் தேவதாஸ் வேதமந்திரங்கள் முழங்க ஆலய வளாகத்தில் தேரோட்டத்திற்கான கொடியேற்றம் நடந்தது. ஊராட்சி தலைவர் ஆசீர்வாதம், மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கியதாஸ், ஒன்றிய கவுன்சிலர் ஆரோக்கிய தாஸ், ஊராட்சி துணை தலைவர் அருள்சாமி மற்றும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. வரும் 30ம் தேதி வரை மாலை 6 மணிக்கு திருப்பலி நிகழ்ச்சி நடக்கிறது. 30ம் தேதி மாலை 6 மணிக்கு தேரோட்டம் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக வலம் வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !