சின்னபுலியூர் செல்லியாண்டியம்மன் பொங்கல் விழா!
ADDED :4157 days ago
பவானி: பவானி தாலுகா சின்னபுலியூர் ஸ்ரீசெல்லியாண்டியம்மன், ஸ்ரீமாரியம்மன் பொங்கல் விழா நடந்தது. கடந்த, 20ம் தேதி காலை, பழைய அம்மன் கோவில் அருகே, பவானி நதியில் இருந்து, தீர்த்தம் எடுத்து வந்து, சிறப்பு அபிஷேகத்துடன் விழா துவங்கியது. காலை, 11 மணிக்கு, ஸ்ரீமாரியம்மன் சிலையை கோவிலுக்கு எடுத்து வருதலும், 12 மணிக்கு தீர்த்த அபிஷேகம், ஆராதனையும் நடந்தது. மறுதினம், காலை, ஸ்ரீசெல்லியாண்டியம்மன், ஸ்ரீமாரியம்மனுக்கு பொங்கல் வைத்தலும், முப்போடு கோவிலுக்கு அழைத்து வருதலும், குதிரை அழைத்தலும், அம்மை அழைத்தலும், மாலையில் மாவிளக்கு எடுத்தலும், மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்தலும் நடந்தது. நேற்று, அதிகாலை கம்பம் பிடுங்குதலும், மதியம் மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. தினமும், இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.