சோழவந்தான் கோயிலில் கத்தி சாத்தும் திருவிழா!
ADDED :4155 days ago
காடுப்பட்டி: சோழவந்தான் அருகே காடுப்பட்டி ராமலிங்கசவுடாம்பிகையம்மன், காளியம்மன், மாரியம்மன் கோயில்களில் வைகாசி பொங்கல் திருவிழா மே 20ல் துவங்கியது. முதல் நாள் வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மூன்று அம்மன்களுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று கோயில் அம்பலக்காரர்கள் முன்னிலையில் பக்தர்கள் கத்தியை உடலில் போட்டு ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். முளைப்பாரி எடுத்து,நெய் மா விளக்கேற்றி, பொங்கல் படைத்து, மாலையில் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை தேவாங்கர் உறவின்முறை விழா கமிட்டி செய்திருந்தது.