குமரி பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா கால்நாட்டு!
ADDED :4155 days ago
நாகர்கோவில் : கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் இரண்டாம் தேதி தொடங்கி பத்து நாட்கள் நடக்கிறது. அன்று காலை 6.30 முதல் 7.30-க்குள் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், சுவாமி பவனி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஜூன் பத்தாம் தேதி தேரோட்டம்நடைபெறுகிறது. 11-ம் தேதி இரவு 8.30 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறுடகறது. இதற்கான கால்நாட்டு விழா கோயில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.