காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் ருத்ர ஹோமம்!
காரைக்கால்: காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கயிலாசநாதர் கோவிலில் 17ம் ஆண்டு அக்னி நட்சத்திர ஏகாதச ருத்ர ஹோம நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள சுந்தராம்பாள் உடனமர் கயிலாசநாதர் கோவிலில் நேற்று உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் மறுமையில் நற்கதியடையவும் இம்மையில் மனமகிழ்ச்சி,குடும்ப நலம்,தொழில்வளம், உலக சமாதனம் நிலவவும் சிவபிரானுக்குரிய பிரதோஷ புண்ணிய தினத்தில் அக்னி நட்சத்திரத்தில் ஏகாதச ருத்ரபாராயணம் மோஹம் நேற்று காலை மஹா கணபதி ஹோமம்,அபிஷேக,சுவாமி அம்பாள் அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை சங்கல்பம்,ஏகாதச ருத்ரகலச பூஜைகள், ருத்ராபிஷேகம், வஸோர்த்தாரா ஹோமம், மஹா பூர்ணாஹீதி தீபாராதனை மதியம்12 மணிக்கு மஹா ஸ்தபன அபிஷேக, மஹா தீபாராதனை மாலை கயிலாசநாதர்,சுந்தராம்பாள் திருக்கல்யாணம் நடந்தது.நிகழ்ச்சிகளை சுந்ரம்பாள்,கயிலாசநாதர் அர்த்தஜாம வழிபாட்டு மன்றம் சிறப்பாக செய்தனர்.