உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோடை உற்சவம் நிறைவு!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோடை உற்சவம் நிறைவு!

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகாசி மாதம் நடக்கும் தாயார் கோடை உற்சவ விழா நிறைவடைந்தது வெளிக்கோடை, உள்கோடை திருவிழா என, தலா, ஐந்து நாட்கள் நடைபெறும் கோடை உற்சவத்தில், வெளிக்கோடை உற்சவம், மே, 21ம் தேதி துவங்கி, நேற்று நிறைவடைந்தது. இதையொட்டி, இரவு, 7 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியார் தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, 7.30 மணிக்கு கோடை நாலு கால் மண்டபத்தை அடைந்தார். இரவு, 8.30 மணி வரை தாயார் புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். பின், நாலூகல் மண்டபத்திலிருந்து புறபட்ட தாயார், இரவு, 8.45 மணிக்கு மூலஸ்தானத்தை அடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !