பழநியில் மோடி பெயரில் அர்ச்சனை!
ADDED :4254 days ago
பழநி : இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதை முன்னிட்டு, பழநிகோயிலில் பாரதிய ஜனதா சார்பில், சிறப்பு அர்ச்சனை, பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பழநி நகரத்தலைவர் சூர்யபிரகாஷ் தலைமைவகித்தார். திருஆவினன்குடி கோயிலிருந்து, பால்குடங்கள் எடுத்து, ஊர்வலமாக சென்று, மலைக்கோயிலில், உச்சிகால பூஜையில், மோடிபெயரில் அர்ச்சனை செய்தனர். மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட தலைவர் திருமலைபாலாஜி, செயலாளர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, பழநி பொதுச்செயலாளர் செல்வராஜ் உட்பட நகர, ஒன்றியத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.