கோபால்பட்டி காளியம்மன் கோயில் விழா
ADDED :4163 days ago
கோபால்பட்டி : கோபால்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. அம்மனுக்கு கும்பம் வைத்து பக்தர்கள் வேண்டுதலுக்காக காப்புக்கட்டினர். மங்கம்பட்டிவிநாயகர் கோயிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மூன்றுநாட்கள் நடந்த விழாவில், அம்மன் அலங்காரம், அர்ச்சனையும் செய்யப்பட்டது. பெண்கள் முளைப்பாரி, மாவிளக்கும், அக்னிசட்டி, பால்குடம், உருள்தண்டம் எடுத்தனர். கிடாவெட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். விழா நிறைவு நாளில் அம்மன் மஞ்சள் நீராடி பூஞ்சோலை அடைந்தார். விழாவில், வாணவேடிக்கை, கரகாட்டம், நாடகம் நடந்தன. காளியம்மன்கோயில் விழாவிற்கான ஏற்பாடுகளை கோபால்பட்டி நாயுடு மகாஜனசங்கத்தினர் செய்திருந்தனர்.