கோயில்களில் பா.ஜ., சிறப்பு வழிபாடு!
ADDED :4163 days ago
மதுரை : மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பா.ஜ., அமைச்சரவையினர் பதவி ஏற்றதையொட்டி மதுரையில் பா.ஜ.,வினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.தல்லாகுளம் பெருமாள் கோயில், அழகர்கோவிலில் சிறப்பு பூஜைகளை நடத்தினர். திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுத்தனர். நகர் தலைவர் முத்தனசாமி, பொது செயலாளர்கள் கார்த்திக்பிரபு, குமாரலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். வண்டியூர் விநாயகர் கோயிலில் பிரகாஷ் தலைமையில் 282 தேங்காய்கள் உடைக்கப்பட்டன.பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே அகில இந்திய மோடி பேரவை தலைவர் அருணாசலம் தலைமையில் ஆலோசகர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் இனிப்புகளை வழங்கினர்.