கமுதி காமாட்சியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை!
ADDED :4162 days ago
கமுதி: காமாட்சியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கமுதி காமாட்சியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழா மே 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 8ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை உற்சவம் நடைபெற்றது. இதில் பெண்கள் பலரும் பங்கேற்று தெய்வ, நாம பாராயண பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடத்தி வழிபாடு செய்தனர்.