காரைக்கால் தர்கா கந்தூரி விழா: பல்லக்கு பணிகள் தீவிரம்!
ADDED :4337 days ago
காரைக்கால்: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் கந்தூரி விழாயொட்டி இரதம்,பல்லக்கு பணிகள் நடைபெற்றுவருகிறது. காரைக்காலில் பிரசித்தி பெற்ற விழாவான மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் 191ம் ஆண்டு கந்தூரி விழா வரும், 8ம் தேதி துவங்குகிறது. அன்று, மாலை ரதம், பல்லக்கு வீதி உலாவும், இரவு 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. ஜூன் 17ம் தேதி இரவு 10 மணிக்கு ஹலபு என்னும் போர்வை வீதி உலா, இரவு 11.30 மணிக்கு மின்சார சந்தனக்கூடு புறப்படுதல் அதிகாலை 3 மணிக்கு வலியுல்லாஹ் அவர்கள் ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசுதல் ஜூன் 20 ம் தேதி கொடி இறக்கம் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் இரதம்,பல்லக்கு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.