அருணாசலேஸ்வரர் கோவிலில் விக்னேஸ்வரர் பூஜை!
செஞ்சி: செஞ்சி அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. செஞ்சி பீரங்கிமேடு அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணிகள் கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வந்தன. புதிதாக வெங்கடேச பெருமாள் சன்னதி, ஐந்து நிலை ராஜ கோபுரம், மூன்று நிலை வாயிற் கோபுரம், 18 சித்தர் சிலைகளுடன் கூடிய தியான மண்டபம் ஆகியவை கட்டியுள்ளனர். மகா கும்பாபிஷேகம் வரும் ஜூன் 1ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு குருவந்தனம், விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், லக்ன பத்திரிகை வாசித்தல், சிறப்பு ஹேமம் மற்றும் பூர்ணாஹூதி நடந்தது. திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் அரங்க ஏழுமலை, திருப்பணிக்குழு உறுப்பினர்கள் செல்வம், ஆசிரியர்கள் ராமமூர்த்தி, ஜெயக்குமார், கண்ணாயிரம், ஜெயக்குமார், சர்தார் சிங், தாமோதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.