முத்துமாரியம்மன் கோயில்களில் வைகாசி பூக்குழி திருவிழா!
ADDED :4155 days ago
திருவாடானை : திருவாடானை அருகே நாச்சியேந்தல், சுப்பிரமணியபுரம், மங்களக்குடி, தினைக்காத்தான்வயல் ஆகிய கிராமங்களில் உள்ள முத்துமாரியம்மன் கோயில்களில் வைகாசி திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து, பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.