அகஸ்தீஸ்வரர் கோவிலில் மகாகும்பாபிஷேகம்!
ADDED :4155 days ago
வில்லிவாக்கம் : அகஸ்தீஸ்வரர் கோவிலில், திருப்பணிகள் முடிந்த நிலையில், அடுத்த மாதம், 8ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. வில்லிவாக்கத்தில் சொர்ணாம்பிகை உடனுறை அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறையின் நிர்வாகத்தில் உள்ள, அந்த கோவிலில், 2012ல் திருப்பணிகள் துவங்கின. தற்போது அவை முடிந்து விட்ட நிலையில், ஜூன் ௫ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. ஜூன் ௮ம் தேதி காலை, 11:00 முதல் 11.20 மணிக்குள், மூலவர் விமானங்கள், பரிவார மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடக்கும். அன்று இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாணமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடக்க உள்ளன.