மலர் வழிபாடு: தங்க கவசத்தில் குறிஞ்சி ஆண்டவர் அருள்பாலிப்பு!
ADDED :4154 days ago
கொடைக்கானல்: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான குறிஞ்சி ஆண்டவருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. நேற்று ரோஜா, கொய் மலர்கள், ஜெர்பரா, பேன்சி, சில்வேனியா மற்றும் ஆயிரக்கணக்காண மலர்களைக் கொண்டு குறிஞ்சி முருகனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் முருகன் தங்க கவசத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.