உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரத்தியங்கிரா காளி கோவிலில் தோஷ நிவர்த்தி அபிஷேகம்!

பிரத்தியங்கிரா காளி கோவிலில் தோஷ நிவர்த்தி அபிஷேகம்!

புதுச்சேரி: பிரத்தியங்கிரா காளி சிலைக்கு, உலக நலனை முன்னிட்டு அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி அபிஷேகம் நடந்தது. புதுச்சேரி அருகே உள்ள மொரட்டாண்டியில் அமைந்திருக்கும், பிரத்தியங்கிரா காளி சிலைக்கு, உலக நலனை முன்னிட்டு அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி அபிஷேக விழா நேற்று நடந்தது. பிரத்தியங்கிரா காளிக்கு, காலை 6.00 மணியிலிருந்து மறு நாள் காலை 6.00 மணிவரை வேத கோஷம், தமிழ் மறை ஓத, மகா அபிஷேக பெருவிழா நேற்று நடந்தது. காளிக்கு நல்லெண்ணெய், வாசனை சீயக்காய் தூள், பச்சரிசி மாவு, மஞ்சள், குங்குமம், இளநீர், வாசனை திரவியங்கள் என 42 வகையான பொருட்கள் மூலம், அபிஷேகம் நடந்தது. மேலும் பால் மற்றும் தயிர் அபிஷேகம் நடந்தது. கோவில் ஸ்தாபகர் நடாதூர் ஜனார்த்தன சுவாமிகள் முன்னிலையில் நடந்த அபிஷேக நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !