உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்: கணபதி ஹோமத்துடன் துவக்கம்!

ஷீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்: கணபதி ஹோமத்துடன் துவக்கம்!

திருத்தணி : திருத்தணி அருகே, ஷீரடி சாய்பாபா கோவிலின் கும்பாபிஷேக விழா, நாளை (30ம் தேதி) கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. திருத்தணி ஒன்றியம், தாடூர் ஊராட்சிக்குட்பட்ட தலையாரி தாங்கல் கிராமத்தில், புதியதாக ஷீரடி சாய்பாபா கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம், வரும் ஜூன் 1, காலை, 10:15 மணிக்கு நடைபெறுகிறது. விழாவை ஓட்டி, நாளை காலை, 9:00 மணிக்கு கோவில் வளாகத்தில், நான்கு யாகசாலை, 1,500 கலசங்கள் வைத்து கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து, நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் முதல்கால யாகபூஜைகள் நடக்கின்றன. நாளை மறுநாள், (31ம் தேதி) காலை, 8:00 மணி முதல், நண்பகல், 11:00 மணி இரண்டாம் காலபூஜை, மாலை, 5:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, மூன்றாம் கால பூஜையும் மற்றும் தீபாராதனையும் நடக்கிறது. வரும் 1ம் தேதி, காலை 7:00 மணிக்கு, நான்காம் காலயாக பூஜையும், காலை, 8:30 மணிக்கு யாத்ரா தானம், காலை, 9:40 மணிக்கு கலசம் புறப்பாடு மற்றும் காலை, 10:00 மணிக்கு கோவில் கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை, 10:15 மணிக்கு, மூலவர் பாபா, விநாயகர் ஆகிய சன்னதிகளில் உள்ள மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் மற்றும் மகா அபிஷேகம் நடக்கிறது. நண்பகல், 11:00 மணிக்கு மதிய ஆரத்தி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !