உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்களநாயகி அம்மன் கோவில் தேர் திருவிழா!

மங்களநாயகி அம்மன் கோவில் தேர் திருவிழா!

மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் தேரில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் வைகாசி பெருவிழா கடந்த 13ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதையொட்டி தினமும் காலை 9:00 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. தேர் திருவிழாவையொட்டி, நேற்று காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து 9:00 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரத்தில் மங்களநாயகி அம்மன் திருத்தேரில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் தேரை வடம்பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !