செஞ்சியில் சாமி சிலைகள் கரிக்கோலமாக ஊர்வலம்!
ADDED :4150 days ago
செஞ்சி: செஞ்சி அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கு பிரதிஷ்டை செய்ய உள்ள சாமி சிலைகள் கரிக்கோல ஊர்வலம் நடந்தது. செஞ்சி பீரங்கிமேடு அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணிகள் முடிந்து, ஜூன் 1ம் தேதி மகா கும்பாபிஷேகம் செய்ய உள்ளனர். இதற்காக புதிதாக வெங்கடேச பெருமாள் , பிரம்மா, நர்தன விநாயகர், ஆஞ்சநேயர், தன்வந்தரி, தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், கலாபைரவர், சூரியன், நவக்கிரகங்கள், 18 சித்தர்கள், தியான லிங்கம் ஆகியனவற்றை பிரதிஷ்டை செய்ய உள்ளனர். நேற்று பிரதிஷ்டை செய்ய உள்ள சாமி சிலைகளை நகர வீதிகள் வழியாக கரிக்கோலம் எடுத்து வந்தனர். இந்த சிலைகளுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து பூஜை செய்தனர்.