உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்காமீஸ்வரர் கோவிலில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தம்!

திருக்காமீஸ்வரர் கோவிலில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தம்!

புதுச்சேரி: வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில், சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டு, பக்தர்கள் வருகை கண்காணிக்கப்படுகிறது. வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில், பல கோடி ரூபாய் செலவில், திருப்பணிகள் நடந்து வருகிறது. கோவிலின் உட்புறத்தில், மிகப் பழமையான செங்கல் சுவர்கள் அகற்றப்பட்டு, காற்றோட்டத்திற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவிலின் உட்புறத்தில் பக்தர், காணிக்கையாக வழங்கிய சி.சி.டி.வி., கேமரா அம்பாள் சன்னதி எதிரே, பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், கோவிலுக்கு வரும் பக்தர்கள், வெளியாட்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இது தவிர, கோவில் முழுவதும் சி.சி.டி.வி., கேமரா பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக, கோவிலின் தனி அதிகாரி மனோகர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !