உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரண்டு ஆண்டாக காலியாக உள்ள அறங்காவலர்கள் பதவி!

இரண்டு ஆண்டாக காலியாக உள்ள அறங்காவலர்கள் பதவி!

கோவை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கோவில்களில் அறங்காவலர் பதவி இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாததால் திருப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். 2011ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன், அறங்காவலர்கள் பதவி விலகும்படி அறிவுறுத்தப்பட்டனர். பெரும்பாலானவர்கள் பதவி விலகினர். பதவி விலகாத சிலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். அறங்காவலர்கள் பதவி விலகி இரண்டு ஆண்டு ஆகி விட்டது. ஆனாலும் இதுவரை பெரும்பாலான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், ஆணையர் ஆகியோருக்கு பக்தர்கள் சார்பில் பலமுறை நினைவூட்டு கடிதங்கள் அனுப்பியும் பதிலில்லை.அதிகாரிகள் உண்டியல் மற்றும் கோவில் வசூலை வைத்து நித்திய பூஜைகளை மட்டும் செய்ய முடிகிறது. உற்சவங்கள், திருப்பணி ஆகியவற்றை அறங்காவலர்கள் தான் முன்னின்று, நன்கொடைதாரர்கள் ஒத்துழைப்போடு செய்து முடிப்பார்கள். அறங்காவலர்கள் நியமிக்கப்படாததால், கோவை மாவட்டத்தில் அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், குமரன்குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில், கோவில்பாளையம், கவையகாளியம்மன் கோவில், காலகாலேஸ்வரர் கோவில் உள்பட பல கோவில்களில் திருப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு உடனே அறங்காவலர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !