திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் உண்டியல் வசூல் ரூ.24 லட்சம்!
ADDED :4147 days ago
திருவாடானை : திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் உள்ள எட்டு உண்டியல்கள் நேற்று முன்தினம் திறக்கபட்டது. அறநிலைய துறை உதவி கமிஷனர் ரோசாலிசுமதா, சிவகங்கை தேவஸ்தான கண்காணிப்பாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் ராஜேந்திரன், கவுரவ கண்காணிப்பாளர் முத்துகண்ணன் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரொக்கம் ரூ.17 லட்சத்து 74 ஆயிரத்து 75, தங்கம் 242 கிராம், வெள்ளி ஒரு கிலோ 180 கிராம் இருந்தது. மொத்த மதிப்பு ரூ.24 லட்சம் என கணக்கிடபட்டது.