திருக்கோவிலூர் இரட்டை விநாயகருக்கு சிறப்பு வழிபாடு
ADDED :4145 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் இரட்டை விநாயகர் கோவிலில், மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழகத்தில் தற்போது நிலவும் கடும் வறட்சி, விடுபடவும், மழை பெருகிட வேண்டியும், திருக்கோவிலூர் இரட்டை விநாயகர் கோவிலில் வருணஜெப ஹோமம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை 6 :00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, வருணகும்ப பூஜை, மகா கணபதி மூலமந்திர ஜபம், ஹோமம் நடந்தது. மூலவர் ஜெயகணபதி, விஜயகணபதி சுவாமிகளுக்கு கலசாபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சணை, தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.