மேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்!
ADDED :4248 days ago
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில், ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நடந்த, ஊஞ்சல் உற்சவத்தின் போது அம்மன் பக்தி பாடல், தாலாட்டு பாடல்களைப் பாடினர். ஊஞ்சல் உற்சவத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.