உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் தங்க தேரோட்டம் திடீர் நிறுத்தம்!

திருச்செந்தூர் தங்க தேரோட்டம் திடீர் நிறுத்தம்!

தூத்துக்குடி: திருச்செந்தூர், முருகன் கோவிலில் தங்கத் தேரோட்டத்திற்கு, உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்துக்கு ஏற்ப, பங்குத் தொகையை உயர்த்தக் கோரி, திரிசுதந்திரர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தங்கத் தேரோட்டம் தடைப்பட்டுள்ளது.திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோவிலில், ௧,௫௦௦ ரூபாயை கட்டணமாகச் செலுத்தினால், அன்று மாலை, 6:௦௦ மணிக்கு தங்கத் தேரோட்டத்தில் பங்கேற்று, தேர் இழுக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தங்கத்தேர் ஓட்டத்துக்காக, ஒரு பக்தர் செலுத்தும் கட்டணத்தில், சுவாமிக்கு பூஜை செய்யும் திரிசுதந்திரர்களுக்கு, 70 ரூபாயும், சுவாமியின் நகைகள் எடுத்துக் கொடுக்கும் தலத்தார்களுக்கு, 40 ரூபாயும் பங்குத் தொகையாக நிர்வாகம் வழங்குகிறது. தங்கத்தேர் இழுப்பதற்கான கட்டணம், கடந்த வாரம், 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, பங்குத் தொகையை உயர்த்த திரிசுதந்திரர்கள் மற்றும் தலத்தார்கள் கோரினர். கோவில் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, திரிசுதந்திரர்கள், தலத்தார்கள், தேர் ஓட்டப்பணியை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தங்கத் தேரோட்டம் நிகழ்ச்சி தடைபட்டுள்ளது.தங்கத்தேர் இழுக்க, நேற்று முன்தினம், மூன்று பக்தர்கள் பணம் செலுத்தியிருந்தனர். தேரோட்டம் தடைப் பட்டதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !