திண்டிவனம் புத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா!
ADDED :4146 days ago
திண்டிவனம்: திண்டிவனம் புத்துமாரியம்மன் கோவிலில் 16ம் ஆண்டு சாகை வார்த்தல் விழா நடந்தது. திண்டிவனம் ஏரிக்கரை புத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழாவை முன்னிட்டு, மூலவர் புத்துஅம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு பூங்கரகம் ஊர்வலத்துடன் பொதுமக்கள் கூழ் பானைகளை ஊர்வலமாக சுமந்து வந்தனர். மதியம் ஒரு மணிக்கு கோவிலில் சாகை வார்த்தல் நடந்தது. தொடர்ந்து இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. முன்னதாக மாலை 6 மணிக்கு, 30 தவில் மற்றும் 30 நாதஸ்வர கலைஞர்களின் சிறப்பு இசை கச்சேரி நடந்தது. விழா ஏற்பாடுகளை, ஏரிக்கோடித்தெரு, தீர்த்தக்குளம் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.