புதூரில் 2 ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED :4149 days ago
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த புதூர் கிராமத்தில் வரும் 2ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் ஊராட்சி மதுரா கிராமம் புதூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 2ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கோவில் கும்பாபிஷேக விழா நடக்கிறது.