வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா!
ADDED :4247 days ago
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா நடந்தது. பூச்சொறிதலுடன் விழா துவங்கி, அன்று இரவு அம்மன் பூப்பலக்கில் உலா வந்தார். புதன் கிழமையன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். வியாழன்று தீச்சட்டி, அலகுகள் குத்தி நேர்த்திகடன் நடந்தது. அன்று இரவு புதுப்பட்டி பொதுமக்கள் சார்பில் வண்டி வேஷமிட்டு வீதி உலா வந்தனர். இரவு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது. உதயகுமார், எம்.பி., பேரூராட்சித்தலைவர் சுசித்ரா, நத்தம் தொகுதி அ.தி.மு.க., செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் பாண்டியன், நகர செயலாளர் பீர்முகம்மது, ஒன்றிய மாணவரனி செயலாளர் சுதாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.