உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்டலம் துலுக்காணத்தம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா!

தண்டலம் துலுக்காணத்தம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா!

திருப்போரூர்: தண்டலம் துலுக்காணத்தம்மன் கோவிலில், தீமிதி விழா நேற்று முன்தினம் நடந்தது. திருப்போரூர் அடுத்த, தண்டலம் துலுக்காணத்தம்மன் கோவிலில், 12ம் ஆண்டு தீமிதி திருவிழா, கடந்த 28ம் தேதி விநாயகர் பூஜை, காப்பு கட்டுதலுடன் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 2:00 மணிக்கு கூழ்வார்த்தல் மாலை 6:00 மணிக்கு தீ மிதி திருவிழா நடந்தது. இரவு 10:00 மணியளவில் அம்மன் அலங்காரத்தில் வீதி உலா வந்தார். நேற்று கும்பம் வீதி உலா மற்றும் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !