கொளஞ்சியப்பர் கோவிலில் வசந்த உற்சவம் துவக்கம்!
ADDED :4148 days ago
விருத்தாசலம்: கொளஞ்சியப்பர் கோவிலில் வைகாசி விசாக வசந்த உற்சவம் துவங்கியது. விருத்தாசலம் மணவாளநல்லுõர் சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம் வரும் 11ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு 10 நாள் வசந்த உற்சவம் நேற்று முன்தினம் முதல் துவங்கியது. தினமும் விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. 11ம் தேதி மாலை 6:00 மணிக்கு வெள்ளித் தேர் உற்சவம் நடக்கிறது.நேற்று சஷ்டியையொட்டி விநாயகர், கொளஞ்சியப்பருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கொளஞ்சியப்பர் அருள்பாலித்தார்.