உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!

திரவுபதியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!

தியாகதுருகம்: தியாகதுருகம், புக்குளம் எல்லையில் அமைந்துள்ள திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (5ம் தேதி) காலை நடக்கிறது. தியாகதுருகம், புக்குளம் எல்லையில் நுõற்றாண்டு பழமையான திரவுபதியம்மன் கோவில் விமானம், விநாயகர், மாரியம்மன், முத்தால்ராவுத்தர் சன்னதி புதுப்பிக்கப்பட்டுள்ளது.  கோவில் வளாகத்தில் உள்ள பாறை மீது 23 அடி உயர ஆஞ்சனேயர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புற ராஜகோபுரம் உள்ளிட்ட பணிகள் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் முடிந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை 8 மணிக்கு நடக்கிறது. நேற்று கோவில் அருகில் உள்ள சங்கு தீர்த்தம் எடுத்து தெளித்து வாஸ்து சாந்தி, கோபூஜைகள் நடந்தது. மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கியது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகம் வளர்த்து பூஜைகளை நடத்தி வருகின்றனர். நாளை காலை 8 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !