உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவானைக்காவல் ராஜகணபதி கோவில் மகா கும்பாபிஷேகம்

திருவானைக்காவல் ராஜகணபதி கோவில் மகா கும்பாபிஷேகம்

திருச்சி: திருவானைக்காவல், ராஜகணபதி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த, 30ம் தேதி காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, காவிரியிலிறுந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு, முதல் கால யாகசாலை மாலை நடந்தது. மே, 31 மற்றும் ஜூன், 1ம் தேதிகளில் யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை, 6 மணிக்கு ராஜகணபதி மூலஸ்தான விமானம், ராமர் சன்னதி, சுப்பிரமணியர் சன்னதி, அனுமார் சன்னதி, நவக்கிரகங்கள் சன்னதி விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்து. காலை, 7.30 மணிக்கு மூலமூர்த்திகள் மகா கும்பாபிஷேகமும், அன்னதானமும் நடந்தது. இரவு உற்சவர் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !