உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 9 கோடி நிலம் மீட்பு

திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 9 கோடி நிலம் மீட்பு

நாகர்கோவில் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தேவசம்போர்டு அதிகாரிகள் மீட்டனர். குமரி மாவட்டத்தில் இக்கோயிலுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் உள்ளது, பெரும்பாலான நிலங்களும் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் உள்ளது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவுக்கு உட்பட்ட ஊட்டுவாழ்மடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான 80 சென்ட் நிலம், அதன் அருகாமையில் மூன்று கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 90 சென்ட் நிலம், கோட்டார் ரயில் நிலையம் அருகில் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான தென்னந்தோப்பு, வடக்கு தாமரை குளம் அருகே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 36 சென்ட் நிலம் ஆகியவை முதற்கட்டமாக மீட்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளுக்காக குழு தலைவர் ஜீவானந்தம் தலைமையில் இந்த பணிகள் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !