குமரியில் 110 கோயில்களில் மழைநீர் சேகரிப்பு பணி!
ADDED :4148 days ago
நாகர்கோவில் : திருக்கோயில்களில் மழை நீர் சேகரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் ஞானசேகர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியது.: குமரி மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் முதற்கட்டமாக 110 கோயில்களில் மழைநீர் சேகரிப்பு பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. திருக்கோயில்கள், குளங்கள், கோயில் அலுவலக கட்டிடங்கள் ஆகியவற்றில் மழை நீர் சேகரிப்பு பணிகள் தொடங்கும். முதற்கட்டமாக சுசீந்திரம் இணை ஆணையர் அலுவலகம், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், இக்கோயிலுக்கு சொந்தமான கட்டிடங்கள், மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப்பள்ளி, கொட்டாரம் திருக்கோயில் நந்தவன வளாகம், குகதநாதீஸ்வரர் கோயில் வணிகவளாகம், திற்பரப்பு மகாதேவர் கோயில் ஆகியவற்றில் இந்த பணிகள் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.