தேர் வடிவ கோயில்!
ADDED :5313 days ago
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி அருகிலுள்ள மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் தேர் வடிவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பை கரக்கோயில் என்கின்றனர். தேவர்களின் தாயான அதிதி தினமும் பூலோகம் வந்து இங்கு சுவாமியை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தாள். அவள் தேவலோகத்திலேயே இத்தலத்து சிவனை வழிபட வேண்டுமென்பதற்காக இக்கோயிலை கொண்டு செல்வதற்காக இந்திரன் கல்லால் தேர் செய்து சிவனை கொண்டு செல்ல முயன்றான். அப்போது விநாயகர் தேர்ச்சக்கரத்தை தரையில் அழுத்தி, நகர விடாமல் செய்து விட்டார். சக்கரத்தை அழுத்திய விநாயகர், ஆரவார விநாயகர் என்ற பெயரில் அருள் செய்கிறார். அவர் சக்கரத்தை மிதித்த அடையாளமாக இடதுபுற சக்கரம் பூமியில் பதிந்திருக்கிறது.