கூத்தப்பாக்கம் சர்வசக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :8 minutes ago
கடலுார்: கடலுார், கூத்தப்பாக்கம் சர்வசக்தி விநாயகர் கோவிலில் முதலாமாண்டு பூர்த்தி சிறப்பு பூஜைகள் நடந்தது. கடலுார், கூத்தப்பாக்கம் எல்.ஐ.சி., நகர் சர்வசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக முதலாமாண்டு பூர்த்தி விழாவை யொட்டி நேற்று காலை தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், புண்யாஹவாஜனம், கணபதி ேஹாமம், மூலமந்தர ேஹாமம் நடந்தது. தொடர்ந்து, மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், கடம் புறப்பாடாகி அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.