ராமேஸ்வரம் கோயிலில் பாலாலய பூஜை!
ADDED :4147 days ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், 2015ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், இக்கோயிலின் உப கோயிலான ராமேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயிலில், ரூ.3 லட்சம் செலவில் திருப்பணிகள் துவங்குவதற்காக, நேற்று பாலாலய பூஜை நடந்தது. கோயில் கண்காணிப்பாளர் ராஜாங்கம், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், இளநிலை பொறியாளர் ராமமூர்த்தி பங்கேற்றனர்.