உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவிலில் ராக தீபத்துடன் கும்பாபிஷேகம்!

திரவுபதியம்மன் கோவிலில் ராக தீபத்துடன் கும்பாபிஷேகம்!

ஆர்.கே.பேட்டை : திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ராக தீபத்துடன் புதுமையாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, செல்லாத்துார் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. திங்கள்கிழமை பிரவேச பலி பூஜையும், நேற்று முன்தினம் யாகசாலை பூஜையும் துவங்கின.கிராம மக்களின் பங்களிப்புடன் கோவில் சீரமைப்பு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து, நேற்று காலை 10:00 மணிக்கு, யாகசாலையில் புனிதநீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.பூஜையின் போது, தெய்வங்களுக்கு பிடித்தமான ராகங்களின் பெயரை வேதவிற்பன்னர்கள் கூற, தொடர்ந்து அந்த ராகம் வாசிக்கப்பட்டது. இது இதுவரையில் இல்லாத புதுவித ஆராதனையாக இருந்தது. தொடர்ந்து, கலசங்களில் இருந்த புனிதநீர், கோவில் முன் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் சிலைக்கும், மூலவர் திரவுபதியம்மன் மற்றும் தர்மராஜா சிலைகளுக்கு ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இரவு 7:00 மணியளவில் அம்மன் வீதியுலா நடந்தது. இதில், செல்லாத்துார், வேலன்கண்டிகை, கிருஷ்ணாகுப்பம், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இன்று அக்னி வசந்த உற்சவம், பாரத கொடியேற்றத்துடன் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !