மண்ணில் புதைந்திருந்த பைரவர் சிலை கண்டுபிடிப்பு!
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த பெருமாள்பேட்டை கிராம குளத்தில் இருந்து பைரவர் சுவாமி கற்சிலை கண்டு பிடிக்கப்பட்டது. திண்டிவனம் வட்டம் ஒலக்கூர் ஒன்றியம் மேல்பாக்கம் ஊராட்சி பெருமாள் பேட்டை கிராமத்தில் அய்யனார் குளத்தின் கரையோரம், பைரவர் சுவாமி கற்சிலை மண்ணில் புதைந்த நிலையில், அடிபாகம் மட்டும் வெளியே தெரிந்தது. நேற்று மாலை 5 மணிக்கு, அந்த பகுதி மக்கள் மண்ணை தோண்டி எடுத்து பார்க்கும் போது, 3 அடி முழு உருவ பைரவர் சுவாமி சிலை கிடைத்தது. இடது கைப்பகுதி உடைந்தும், இடது கண் பகுதியில் லேசான கீரல்களுடன் இருந்த சிலையை ஊராட்சி தலைவர் அண்ணாதுரை காசியம்மாள் மூலமாக வி.ஏ.ஓ., உமாசங்கர், வருவாய் ஆய்வாளர் செங்குட்டுவன் ஆகியே õரிடம் கொடுத்தனர். இவர்கள் தாசில்தார் கோவிந்தனிடம் ஒப்படைத்தனர். மண்டல துணை தாசில்தார் பிரபாகரன், தலைமையிடத்து துணை தாசி ல்தார் பரமேஸ்வரி, திண்டிவனம் வருவாய் ஆய்வாளர் லட்சாதிபதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.