உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!

பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கொப்பையம்பட்டி சீனிவாசப்பெருமாள் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்  செலுத்தினர்.  இங்குள்ள சீனிவாசப்பெருமாள் கோயில் பெரியகும்பிடு விழா, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த ஆண்டு கோயில்  கும்பாபிஷேக விழாவுக்குப்பின், கோயில் கும்பிடு விழா துவங்கியது.  விழாவில், பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்தனர். சிறப்பாக ÷ நர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் பயபக்தியுடன் கோயில் வளாகத்தில் அமர்ந்தனர்.  பூஜாரி பெருமாள் சாட்டையுடன் சாமியாடினார். பின்னர்  வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தார்.  தேங்காய் உடைபட்டாலும், பக்தர்களுக்கு தலையில் காயம் ஏற்படவில்லை.  தொழில் விருத்திக்காக பக்தர்கள் இந்த நேர்த்திக்கடன் செலுத்துவதாக தெரிவித்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த உறவினர்கள் பெரிய  கோயில் கும்பிடு விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !