உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியக்குடி திருவேங்கமுடையான் கோயில் கொடியேற்றம்!

அரியக்குடி திருவேங்கமுடையான் கோயில் கொடியேற்றம்!

காரைக்குடி : தென் திருப்பதிகளில் ஒன்றான,அரியக்குடி அலர்மேல் மங்கை உடனுறை திருவேங்கமுடையான் கோயில்,கொடியேற்றத்தை முன்னிட்டு,காலை 6.30 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. அதை தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில், சீதேவி, பூதேவியுடன், கொடிமரம் அருகில் எழுந்தளினார். காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இரவு 9 மணிக்கு, அம்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. விழா நாட்களில், இரவு சுவாமி வீதி உலா, வரும் 13-ம் தேதி, தேரோட்டம், 16-ம் தேதி தெப்பதேர் விழா நடக்கிறது.ஏற்பாடுகளை, நிர்வாக அதிகாரி மகேந்திரன், அறங்காவலர் தலைவர் அழகம்மை ஆச்சி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !