தீவனூர் கோவிலில் கொடியேற்று விழா!
ADDED :4151 days ago
திண்டிவனம்: தீவனூர் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனூர் ஆதிநாராயண பெரு மாள் என்கிற லட்சுமி நாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம் காலை கொடி யேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி மூலவருக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பூஜைகளை புதுச்சேரி ரெட்டியார் பாளையம் மகாலட்சுமி கோவில் அர்ச்சகர் ஜெகநாதன் அய்யர் தலைமையிலான குழுவினர் செய்தனர். விழாவையொட்டி ஹம்சம், சிம்மம், சேஷம், ஹனுமந்த், யானை, குதிரை ஆகிய வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 8 ம் தேதி கருடசேவையும், 10ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 12ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா முனுசாமி செய்து வருகிறார்.