சுப்ரமணிய சுவாமி கோவிலில் 8ம் தேதி கும்பாபிஷேகம்!
கடலுார்: கடலுார், புருகீஸ்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 8ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு, நேற்று முன்தினம் மகா சங்கல்பம், கணபதி ஹோமம் வழிபாடு, தன பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி நடந்தது. நேற்று காலை மூர்த்தி ஹோமம், பிரன்னாபிஷேகம், அக்னி தீர்த்தசங்கிரஹணம், மாலை அங்குரார்ப்பணம், கும்பாலங் காரம், யாகசாலை பூஜை, விஷேச திரவிய ஹோமம் நடந்தது. இன்று காலை 8:00 மணிக்கு யாகசாலை பூஜைகள், கஜ பூஜை, விசேஷ பூஜை, 9:00 மணிக்கு புதிய விக்ரகங்கள் கண் திறத்தல், மாலை 5:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்துமாற்றுதல், நாளை இரவு 7:30 மணிக்கு தெய்வங்களுக்குக் காப்பு கட்டுதல் நடக்கிறது. தொடர்ந்து 8ம் தேதி காலை 7:00 மணிக்கு யாக சாலையில் நாடிசந்தானம், கடங்கள் புறப்பாடு, 7:45 மணிக்கு விமானங்கள் கும்பாபிஷேகம், 8:00 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகம் நடக்கிறது.