உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சைவாழியம்மன் கோவில் நாளை கும்பாபிஷேகம்!

பச்சைவாழியம்மன் கோவில் நாளை கும்பாபிஷேகம்!

கிருமாம்பாக்கம்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் உடனுறை மன்னாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், நாளை (8ம் தேதி) நடக்கிறது. அதையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கியது. இன்று (7ம் தேதி) காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 10:30 மணிக்கு புதிய பிம்பங்கள் கரிக்கோலம், பகல் 12:00 மணிக்கு மங்கள மஹா பூர்ணாஹூதி, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி, 8ம் தேதி காலை 7:30 மணிக்கு சோம பூஜை, சூர்ய பூஜை, வேதிகார்ச்சனை, பிம்ப சுத்தி, நான்காம் கால யாக பூஜையும், 9:00 மணிக்கு மங்கள மஹா பூர்ணாஹூதியும் 9.45 மணிக்கு கடம் புறப்பாடும் நடக்கிறது. சரியாக, 10:05 மணிக்கு ராஜகோபுர விமான கும்பாபிஷேகமும், 10:30 மணிக்கு மூலஸ்தான பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு வினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !