காளியம்மன் வைகாசி பெரு விழாவில் அம்மன் கரகம் வீதியுலா!
ADDED :4143 days ago
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு மேட்டுத் தெரு காளியம்மன் கோயில் வைகாசி பெரு விழாவில் அம்மன் கரகம் வீதியுலா நடந்தது. சேத்தியாத்தோப்பு வடக்கு மேட்டுத் தெருவில் உள்ள மகா காளியம்மன் கோயில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் விசேஷ அர்ச்சனையும் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனையும் சக்தி கரக அலங்கார பூஜையும் நடந்தது. இரவு அம்மன் சக்தி கரகம் வீதியுலாவும் உடன் மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. கோழி ரத்தம் குடித்து பக்தர்கள் சாமியாடினர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்ன தானம் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.