பழநி வைகாசி விசாக விழா: தங்கமயில் வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி!
ADDED :4142 days ago
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பழநி வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஆறாம் நாளான ஜூன் 10ல் மாலை 6 மணிக்கு மேல் 8 மணிக்குள், முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணமும், ஏழாம் நாள் ஜூன் 11ல் வைகாசி விசாகத்தன்று, மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது.