உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் சிலை கண் திறந்ததா? ஈரோடு அருகே பரபரப்பு!

அம்மன் சிலை கண் திறந்ததா? ஈரோடு அருகே பரபரப்பு!

ஈரோடு: அம்மன் சிலை, திடீரென கண் திறந்ததாக தகவல் பரவியதையடுத்து, ஈரோடு அருகே உள்ள, முத்துமாரியம்மன் கோவிலில், பக்தர்கள் குவிந்தனர். ஈரோடு, ஆர்.என்.புதூர் அடுத்த, அமராவதி நகரில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை, 4:00 மணியளவில், கோவிலில் உள்ள அம்மன் சிலையின் இடது கண் திறந்து மூடுவதாக, சிறுமி ஒருவர், அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தார். இந்த தகவல், அப்பகுதி முழுக்க மளமளவென பரவியது; சுற்றுவட்டாரத்தினர், கோவிலில் குவிய துவங்கினர். சில பக்தர்களும், ’அம்மன் சிலையின், இரண்டு கண்களும், ஒரு மணிநேரம், கண் திறந்து, மூடியது’ என, தெரிவித்தனர். பின், அம்மனுக்கு, மஞ்சள், குங்குமம், பால், இளநீர், தண்ணீர் உள்ளிட்ட, 21 வகையான பொருட்களை கொண்டு, அபிஷேக, ஆராதனை நடந்தது. அம்மன் கண் திறந்ததாக எழுந்த தகவலால், நேற்று முன்தினம் முதல், அப்பகுதி மக்கள், கோவிலில் குவிய துவங்கியுள்ளனர். குறிப்பாக, பெண் பக்தர்கள், அதிக அளவில் கூடி, பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !