வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!
ADDED :4141 days ago
வில்லிவாக்கம்: வில்லிவாக்கம், அகஸ்தீஸ்வரர் கோவிலில், நேற்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. வில்லிவாக்கம், சொர்ணாம்பிகை உடனுறை அகஸ்தீஸ்வரர் கோவில், இந்து சமய அறநிலைய துறை நிர்வாகத்தில் உள்ளது. ஐநுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த கோவிலில், 2012ம் ஆண்டு திருப்பணிகள் துவங்கின. திருப்பணிகள் முடிந்த நிலையில், கடந்த, 5ம் தேதி மகா கும்பாபிஷேகத்திற்கான, விநாயகர் பூஜை துவங்கியது. தொடர்ந்து, 6, 7ம் தேதிகளில், யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, நேற்று காலை, 11:00 மணிக்கு கடம் புறப்பாடு துவங்கி, 11:20 மணிக்கு, சொர்ணாம்பிகை உடனுறை அகஸ்தீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு, 8:00 மணிக்கு திருக்கல்யாணமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடந்தன.